உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இரகசிய கடிதம் தொடர்பான செய்தியை சவூதி மறுத்துள்ளது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு முன்னதாக ஏப்ரல் 16ஆம் திகதியன்று தாம் இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்துக்கு அனுப்பியதாக கூறப்படும் இரகசியக் கடிதம் தொடர்பான தகவல் பொய்யானது என்று சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக லெபனான் செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

அதில் எதிர்வரும் சில தினங்களுக்கு தமது அலுவலர்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும்
அத்துடன் ஊரடங்கு நேரத்தில் கவனமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இருந்ததாக லெனான் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, கொழும்பின் குண்டுத்தாக்குதல் சவூதி வெளியுறவு அமைச்சுக்கு தெரிந்திருந்தது என்ற தோரணையில் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

எனினும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று சவூதியின் வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

——————————————————–

(லெபனான் செய்திசேவை வெளியிட்ட இரகசிய கடித வடிவம் கீழே:-)

Urgent – Top Secret

His Excellency Ambassador Abdul Nasser bin Hussein al-Harethi

You should carry out the following measures immediately:

First: You should delete all documents, computer data and latest correspondence with domestic and foreign members and groups, in addition to imposing a curfew for the embassy personnel unless it is necessary

Second: You should inform all those related to the Kingdom of Saudi Arabia including counselors, security forces and intelligence during the three coming days, especially on the Christian Easter Day, to avoid presence in public and crowded places namely churches

Third: You should send written news about the Sri Lankan authorities and their viewpoints regularly to this ministry

Ibrahim bin Abdul Aziz al-Assaf

Foreign Minister

கருத்து தெரிவிக்க