சினிமாசினிமா

பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (The Greatest Of All Time) படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டரை வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Also ReadSK ரசிகர்களின் “அயலான்”

பொங்கலன்று விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கருத்து தெரிவிக்க