இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தவறான முறையில் பெண் வைத்தியரை வீடியோ பதிவு செய்தவர் கைது

கண்டி தேசிய வைத்தியசாலையின் உடை மாற்றும் அறையில் இரகசியமான இடத்தில் கைத்தொலைபேசியை வைத்து பெண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் பணிக்கான ஆடைகளை மாற்றியமைப்பதை வீடியோ பதிவு செய்த வைத்தியசாலை ஊழியர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசியை அவதானித்த குறித்த பெண் வைத்தியர் அதனைப் பரிசோதித்தபோது அவர் உடை மாற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சியை அழித்துவிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். வைத்தியசாலை ஊழியர் மற்றும் கைத்தொலைபேசி கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், பெண் மருத்துவர்களின் உடை மாற்றும் அறையில், வீடியோ பதிவு செய்யும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், அவற்றைப் பார்த்துவிட்டு அழிப்பதாகவும் குறித்த வைத்தியசாலை ஊழியர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க