அழகு / ஆரோக்கியம்

வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்!

வெள்ளரிக்காய் பல சத்துக்கள் கொண்ட காயாகும். இதனை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது, எனவே வெள்ளரிக்காயை அடிக்கடி உண்டு வர உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்பு உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

 

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வர வாயில் உண்டாகும் கிருமிகள் அழியும், ஈறுகள் பலப்படும், அதோடு வாய் துர்நாற்றமும் கட்டுப்படும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.

 

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைக் காணலாம். கொழுப்பு செல்கலைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.

கருத்து தெரிவிக்க