இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது . அந்த வகையில் 2023 இல் மொத்தம் 1,550 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 173 நோயாளர்கள் பாடசாலை மாணவர்களிடையே பதிவாகியுள்ளன.  கொழும்பு மாவட்டத்திலிருந்து 315 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . மேலும் முறையே 168 மற்றும் 151 நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
பாடசாலை மாணவர்களிடையே நோயாளர் அதிகரிப்பினால், தொழுநோய் தொற்றுகளைக் கண்டறியும் தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டு வகையான தொழுநோய் பரவுகிறது , தொற்றக்கூடியது மற்றும் தொற்றாதது. துரதிர்ஷ்டவசமாக, கண்டறியப்பட்ட நோயளர்களில், 60% நோய் பரவுவதற்கான அதிக அபாயத்தைக் குறிக்கிறது.
தொழுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் தன் கடமைகளை நுணுக்கமான அணுகு முறையில் கையாள்கிறனர்.  நோய்த்தொற்று மற்றும் தொற்றாத வடிவங்கள் இரண்டிற்கும் தீர்வு காண ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள்.

கருத்து தெரிவிக்க