நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் கீரி சம்பா, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வியாபாரிகள் பொருட்களின் விலைகளை இஷ்டத்துக்கு அதிகரித்து வருவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
வற்வரி அதிகரிப்புக்கு முன்னர் 300 ரூபாவாக சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ பருப்பு விலை தற்போது 350 முதல் 400 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 325 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க