இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் முக்கிய அறிவித்தல்

குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைதோரும் முன்னெடுக்கப்படும் என சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (08.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மேலதிக தட்டம்மை தடுப்பூசி திட்டம் 83 வீதம் வெற்றியடைந்துள்ளதுடன் மேலும் தடுப்பூசி போட வேண்டிய 30,455 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களில் 25,286 பேர் சமீபத்தில் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக தட்டம்மை தடுப்பூசி திட்டத்தில் யாழ்ப்பாணம் 93 வீதமும், கண்டி 90 வீதமும், குருநாகல் 88.7 வீதமும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சுமார் 5000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க