ஜப்பானில் கடந்த 1ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலநடுக்கத்தில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 8.16 மணியளவில் ஜப்பானின் ஹோன்ஷு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹோன்ஷு தீவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 40.9 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க