ஜோதிடம்

நட்சத்திர பொதுப் பலன்கள்: புனர்பூசம் முதல் சித்திரை வரை

இந்த பதிவில் 27 நட்சத்திரங்களில் புனர்பூசம் முதல் சித்திரை வரையான நட்சத்திரங்களின் பொதுப்பலன்களை காணலாம். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • தெளிவான சிந்தனை உடையவர்கள்.
  • பொதுத்தொண்டில் விருப்பம் கொண்டவர்கள்.
  • உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.
  • கடுமையாக பேசுபவர்கள், கள்ளத்தனம் கொண்டவர்கள்.
  • அறிவாளி, பொய் பேச மாட்டார்கள் .

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • எல்லாத் துறைகளிலும் ஞானம் உடையவர்கள் .
  • தாய் தந்தையர் மீது அன்பு கொண்டவர்கள்.
  • பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்
  • எடுத்த செயலை ஜெயத்தொடு முடிக்க கூடியவர்கள்.
  • நண்பர்கள் மத்தியில் கீர்த்தியுடன் வாழ்வார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • பல திறமைகளை கொண்டவர்கள்.
  • எண்ணிய வாழ்க்கையை  எண்ணிய விதம் வாழ்வார்கள்.
  • விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்
  • தாய் தந்தையர் மீது அன்பு கொண்டவர்கள்.
  • தர்ம நியாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.
  • திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லவர்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
  • சங்கீத கலையில்  விருப்பம் உடையவர்கள்.
  • வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர்கள்.
  • கல்வி கற்பதில் விருப்பம் கொண்டவர்கள்.
  • வெளிப்படையாக பேசக் கூடியவர்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • பிடித்த உணவுகளை  சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.
  • தங்களை  பற்றியே  பெருமையாக எண்ணக் கூடியவர்கள்.
  • பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.
  • கனிவான சொற்களை பேசக்கூடியவர்கள்
  • திட்டமிடுவதில் வல்லவர்கள் .

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • இனிமையாக பேசக் கூடியவர்கள்.
  • கல்வியில் நாட்டம் உடையவர்கள்.
  • அழகிய நடை உடையவர்கள்.
  • பிறருக்கு உதவும் இயல்பு உடையவர்கள்.
  • செய்த உதவியை  மறவாதவர்கள்.
  • வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:

  • நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.
  • சேமிப்பில் விருப்பம் உடையவர்கள்.
  • நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளை ரசிப்பதில் வல்லவர்கள்.
  • எளிதில் பழகும் இயல்புமடயவர்கள்.
  • தாயாரின் மீது மிகுந்த அன்பு உடையவர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் :

  • தான் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவர்கள்.
  • வெளியூர் பயணங்களில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள்.
  • கல்வி கேள்வியில் நாட்டம் உடையவர்கள்.
  • தற்புகழ்ச்சியில் விருப்பம் உடையவர்கள்.
  • ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
  • தைரியம்  உடையவர்கள்.

கருத்து தெரிவிக்க