இந்த பதிவில் 27 நட்சத்திரங்களில் முதல் ஆறு நட்சத்திரங்களின் பொதுப்பலன்களை காணலாம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.
- தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.
- எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பவராக இருப்பார்கள்.
- தனது தாய் தந்தை மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள் .
- அழகும், முரட்டுச் சுபாவமும் உடையவராக இருக்கக் கூடும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- நினைத்ததை சாதிக்க கூடிய மனவல்லமையும், கோபமும், பிடிவாத குணமும் கொண்டவர்கள்.
- மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். சிலருக்கு பெண்களால் பான விரயம் ஆகலாம்
- கொஞ்சம் பயந்த தன்மையும் கோழைத்தனமும் அவ்வப்போது தோன்றி மறையும்.
- பெரும்பாலும் இவர்கள் இரும்பு சம்பந்தமான தொழிலை செய்யக் கூடியவர்கள் .
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- சாமர்த்தியசாலியாக திகழக்கூடியவர்கள்
- விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் இருக்கும்.
- தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள்.
- அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கக் கூடியவர்கள்.
- கொஞ்சம் முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள் .
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- நல்ல அழகிய உடல் அமைப்பும், புத்திசாலியாகவும் இருப்பார்கள்
- மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் திகழ்வீர்கள்
- விவசாயம் மூலம் வருமானம் கிடைக்கும்
- சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்
- நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.
- நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.
- இரகசியங்களை பாதுகாப்பவர்கள்.
- தீர்க்கமான அறிவினை உடையவர்கள்.
- தாய் மற்றும் தந்தை மீது பாசம் கொண்டவர்கள் .
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- நல்ல புத்திசாலியாகவும், பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள்.
- கல்வியில் ஓரளவு நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- அழகான கண்களை கொண்டவர்கள்.
- பெரும் புகழுக்கு உரியவர்கள்.
கருத்து தெரிவிக்க