இலங்கை

சிறைக்கைதிக்கு சிம் அட்டை வழங்கிய கட்டுப்பாட்டாளர் பதவி நீக்கம்

நீர் கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிக்கு சிம் அட்டைகளை வழங்கிய சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய இதனை தெரிவித்தார்.

சேவை நீக்கம் செய்யப்பட்ட குறித்த நபர் அந்த சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையின் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டுள்ளதாகவும் இவர் குறித்த கைதிக்கு இதற்கு முன்னர் தொலைபேசியை வழங்கியுள்ளதாகவும், மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க