உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழ் சிறுவர்கள் பயங்கரவாதிகளா? முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 939 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று  கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம்  சரணடைந்தவர்கள்  கையளித்த சிறுவர்களை இலங்கை அரசாங்கம் இன்றுவரை பெற்றோரிடம் ஒப்படைக்காத  நிலையில் அந்த சிறுவர்கள் எங்கே என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.

” எமது சிறுவர்கள் படுகொலைக்கு சர்வதேசத்தின் தீர்வு என்ன, இறுதியுத்தத்தில் பெற்றோருடன் சரணடைந்த சிறுவர்கள் எங்கே? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் தமிழ் சிறுவர்கள் என்ன பயங்கரவாதிகளா ? எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே ? என  பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க