தமது சம்பள முரண்பாடு தீர்க்கப்படாதுபோனால் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு செல்லப்போவதாக அரசாங்க மருத்துவர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகுழு உரிய தீர்வை இன்னும் தரவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மங்கள சமரவீர, ரஞ்சித் மத்துமபண்டார, வஜிர அபேவரத்தன, ராஜித சேனாரத்ன ஆகியோரும் ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கவும் இந்தக்குழுவில் அங்கம் பெறுகின்றனர்.
இந்தக்குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இதேவேளை அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்திய சம்பள மீளாய்வு ஆணைக்குழுவின் அடிப்படை சம்பள அதிகரிப்பு பரிந்துரை சம்பள பிரச்சனைகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க