உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

10 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டன.

ஐஸ் என்ற போதைப்பொருள் வில்லைகள் அஞ்சல் பொதி ஒன்றில் வந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மெதம்பெட்டமின் என்ற இந்த ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 1961 வில்லைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் வில்லைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தன நிலையத்தில் இருந்து கைப்பப்பட்டுள்ளன.

இவற்றின் சந்தைப்பெறுமதி 10 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க