அழகு / ஆரோக்கியம்

மாதவிடாய் நின்று போகும் காலத்தில் கவனிக்க வேண்டியவை !

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் தடைப்படும் காலத்தில் அல்லது நின்று விட்ட காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதில் முக்கியமானது உடலின் நிறை அதிகரித்தலும், சோர்வும் .

மாதவிடாய் நின்று விட்ட காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு வீழ்ச்சி அடையும். இந்த மாற்றம் உடலின் செயற்பாட்டு  வேகத்தைக் குறைக்கும். இதனால் சோம்பலை ஏற்படுத்துவதோடு அதிகமான உணவை உட்கொள்ள வைக்கும். இதன் காரணமாக உடலின் நிறை அதிகரிக்கும்.

மேலும் வயதாகும் போது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், உடற் செயற்பாடுகள் போன்றனவும் உடலின் நிறை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது.

இதற்கு சரியான உணவு முறைகளையும் ஆரோக்கியமான  வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் அந்த நேரத்திலும் உடலின் நிறை அதிகரிப்பதை தடுக்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அவ்வாறான முறைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து உடலின் செயற்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

பட்டினி கிடக்காமல்  சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.

சோர்ந்து இருக்காமல் நிச்சயமாக உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.

பழங்கள், பச்சை கீரை வகைகள், மரக்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொரித்த உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

உணவின் அளவு, எத்தகைய உணவு என்பதில் மாற்றங்கள் செய்து அவற்றை கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். அத்துடன் இயன்ற உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம்.

 

 

கருத்து தெரிவிக்க