உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று 100 மில்லிமீற்றர் மழை பெய்யும்

நாடளாவிய ரீதியில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

மேல்மாகாணம், தென்மாகாணம் சப்ரகமுவ மாகாணம், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

இந்தநிலையில் இன்று காலை 8.30வரை நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்த மழைவீழ்ச்சியின்படி:-

காலி- 106 மில்லிமீற்றர்
கொழும்பு- 104 மில்லிமீற்றர்
இரத்மலானை- 101 மில்லிமீற்றர்

இதேவேளை நீர்ப்பாசன திணைக்கள அறிக்கையின்படி களுகங்கையின் மில்லிகந்த, ஜின் கங்கையின் பெத்தேகம, நில்வள கங்கையின் பனடுகம, அத்தனகலஓயாவின் டூனாமலே ஆகிய இடங்களில் சிறியளவான வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க