உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 29 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி   விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
-அவர் மேலும்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (29)   காலை 7.15மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் இலங்கைக்கான திருப்பீடத்தின் பிரதி நிதி பங்கேற்று ஏனைய குருக்கள், துறவிகள், பொது நிலையினர், என மக்கள் இந்த விழாவிலே கலந்து கொள்ள உள்ளதோடு,   விசேட திருப்பலியும், நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற இருக்கின்றது.
475ஆவது ஆண்டு நிறைவு விழா திருப்பீடத்தின் கோரிக்கைக்கு அமைவாக அதாவது மன்னாரில் 1544ஆம் ஆண்டு கத்தோலிக்க விசுவாசத்திற்காக இன்னுயிர் ஈர்ந்த மக்களை நினைவுக்கூர்ந்து அவர்களை கத்தோலிக்க திருஅவையின் மரபுக்கேற்ப புனிதர்களாக உயர்த்துவதற்குரிய முயற்சிகளை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
அதற்கமைவாக முதற்கட்டமாக அவர்கள் ‘இறையடியார்கள்’ என்று திருப்பீடம் அங்கிகரிக்கின்ற அந்த நிலைக்காக மன்னார் மறைமாவட்டம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
475ஆவது ஆண்டுகளாகி விட்டன. இவர்களுடைய புனித மரணம் கத்தோலிக்க விசுவாசத்திற்கான ஒரு  எடுத்துக்காட்டான மரணமாக அமையப்பெற வேண்டுமென மறைமாவட்ட ரீதியிலான முயற்சிகளை எடுத்து அவர்களுக்கான பக்தி முயற்சிகளை நாம்  மேற்கொண்டு ,அவர்களிடம் இரந்து கேட்டு திருப்பீடம் இவர்களை அங்கிகரிக்கும் நிலைக்கு இவர்கள் வருவதற்கான பல்வேறு முயற்சிகளின் ஓர் அங்கமாக இந்த 475ஆவது ஆண்டு நிறைவு விழாவும் அமைந்திருக்கின்றது.
அன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்டத்தில் உள்ள சகல ஆலயங்களிலும் காலை திருப்பலிகள் இடம் பெறமாட்டாது என்பதுடன் எல்லா பங்கு கத்தோலிக்க மக்களும் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி  திருத்தலத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி   விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க