நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (செப்டம்பர் 26ஆம் திகதி) சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென், சப்ரகமுவ,மத்தியமற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கருத்து தெரிவிக்க