இன்றைய கால கட்டத்தில் நாம் இனிப்புச் சுவைக்கு சீனியையே அதிகமாக பயன்படுத்துகின்றோம். ஆனால் நம் மூதாதையர்கள் சீனிக்குப் பதிலாக சர்க்கரையையும் கருப்பட்டியையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றில் பல நன்மைகள் ஒளிந்துள்ளன. குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வரும் இவற்றை அன்றாடம் எமது உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளைப் பெற இயலும். அவை பற்றி பார்ப்போம்.
கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையில் சிறிதளவு எடுத்து நீரில் கரைத்து பருகி வந்தால் உடம்பில் உள்ள சுடு தணிந்து குளிர்ச்சியாகும்.
சர்க்கரையில் செலீனியம் உள்ளது. இரவில் பிட்டு அல்லது ரொட்டியுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொண்டால் நல்ல உறக்கம் வரும்.
சர்க்கரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலிக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கும் சிறந்தது.
மேலும் உடலின் நிறையை குறைத்து, உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றுகின்றது.
கருத்து தெரிவிக்க