உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசாரணை முடியும் வரை தில்ருக்ஸியின் பதவி இடைநிறுத்தப்படவேண்டும்

விசாரணைகள் முடியும் வரை மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதக்களஞ்சிய எவென்காட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜிஎல் பீரிஸ் இந்தக்கோரிக்கையை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது விடுத்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்படும் மற்றும் ஏனைய வழக்குகளின்போது மோசடியாளர்கள் ஊடுருவி செயற்படுவதை அறிந்துக்கொள்ளமுடிகிறது.

இது தில்ருக்ஸியில் ஆரம்பிக்கவில்லை. அவருடன் முடிவடையப்போவதில்லை.

இந்த விடயத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளமையையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் அதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டும் என்று பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.

கருத்து தெரிவிக்க