பொன்மொழிகள்

கையாடல்! சாணக்கியர்

  • நாவிலே பட்ட தேனையோ, நஞ்சையோ சுவைக்காமல் இருப்பது கடினம். அதை போல ஆள்வோனுடைய செல்வத்தைக் கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பவன் ஒருசிறிதளவேனும் எடுப்பதினின்று தடுக்க முடியாது.
  • ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம். ஆனால் அதிகாரிகளின் எண்ணப் போக்கை அறிய முடியாது.
  • நீரில்அசைந்து கொண்டிருக்கும் மீன் எப்பொழுது நீரை அருந்தும் என்று அறிவது எவ்வளவு கடினமோ, அரசுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் எப்பொழுது கையாடல் செய்கிறார்கள் என்பதை அறிவதும் கடினமானது.

கருத்து தெரிவிக்க