தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் தமது செல்வாக்கு பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று அவர் சாட்சியமளிக்கையில் இதனைக்குறிப்பிட்டார்.
இந்த நியமனங்களுக்கு அதிகாரசபை உயரதிகாரிகளே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
நியமனங்களுக்கு குறைந்தப்பட்ச தகுதிகளை கருத்திற்கொள்ளுமாறு அறிவுறுத்த உள்ளபோதும் அதற்கான பணிப்புரையை விடுக்கவில்லை என்றும் அமைச்சர் சஜித் குறிப்பிட்டார்.
இதேவேளை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பணிநியமனங்கள் உரிய நியமங்களின்படியே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க