அடுத்து வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென்மாகாணங்களில் இந்த மழைவீழ்;ச்சி பதிவாகவுள்ளது.
அத்துடன் ஊவா, வடமேல், வடக்கு,கிழக்கு ஆகிய இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜின், நில்வள, களு கங்கையின் அருகில் வாழும் காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்கள் வெள்ளம் தொடர்பி;ல் விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை சீர்கேட்டை அடுத்து மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
களுத்துறை,காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை தொடர்ந்தால், மண்சரிவு, நிலத்தாழ்வுகள் போன்ற ஆபத்துக்கள் நேரலாம் என்றும் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க