மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவேண்டும் என்று தாம் கோரியதாக ஜனாதிபதி கூறியுள்ளமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின்படி பிரதம நீதியரசருக்கும் சட்டமா அதிபருக்கும் மாத்திரமே உயர்நீதிமன்ற நீதியரசர்களை பரிந்துரைக்கும் அதிகாரம் உண்டு.
இந்தநிலையில் தம்மால் இதனை எவ்வாறு செய்யமுடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
இதேவேளை மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ், எவென்காட் பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் பேசிய விடயம் தொடர்பில் விசாரணைகள் விரைவுப்படுத்தப்படவேண்டும்.
அத்துடன் இந்த விடயத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கலாம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க