பொதுவாக சிலருக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். இதுவே அதிகமாகும் பொழுது அது நோயாக உருவெடுக்கும். இதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கான தீர்வுகள் எவை என்பதை பார்ப்போம்.
அவசரமான வாழ்க்கைச் சூழல் முறையில் இருந்து மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க இயலும்.
சத்தான உணவுகள். உடற்பயிற்சி என்பன எம்மை ஆரோக்கியமாகவும் மனநிலையை உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுவன. அதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
விற்றமின் ஏ, சி, இ, நிறைந்த மரக்கறி வகைகளை சாப்பிட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து பச்சை கீரை வகைகளையும், இலகுவாக செமிபாடு அடையக் கூடிய உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.
எப்போதும் பரபரப்பாக இல்லாமல், நேரத்தையும் வேலையையும் திட்டமிடலாம்.
மூளைக்கு வேலை உள்ள விளையாட்டுகளில் ஈடுபடலாம். உதாரணமாக நொடி (புதிர்) போடுதல், வார்த்தை விளையாட்டுகள் போன்றவை.
நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், பழச்சாறுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கருத்து தெரிவிக்க