உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய எச்சரிக்கை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சாட்சியமளிக்கும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் முன்னால் தாம் சாட்சியமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி தொடர்ந்தும் கூறிவந்தார்.
எனினும் இறுதியில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி சாட்சியம் வழங்கினார்.
ஜனாதிபதியின் சாட்சியம் தொடர்பில் விடயங்களை வெளியிடமுடியாது என்று குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதி செயலகத்தரப்பின் தகவல்படி தமக்கு தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை குறித்து அறிவிக்கப்படவில்லை.
எனவே இதற்கு காவல்துறை அதிபரும் பாதுகாப்பு முன்னாள் செயலாளருமே பொறுப்பேற்கவேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சாட்சியமளிப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியதாகவும் பின்னர் அது சுமுகமாக இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க