கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள லோட்டஸ் டவர் என்ற தாமரை கோபுரம் இன்று மாலை ஜனாதிபதி மைத்ரிபாலவினால் திறந்து வைக்கப்பட்டது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய, சீன தூதுவர் உட்பட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வை முன்னிட்டு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.
லோட்டஸ் டவர் பல்நோக்க தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்புகள் கோபுரமாக அமைக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்;ட இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும்.
சீனாவின் எக்ஸிம் வங்கியின் 104.3மில்லியன் டொலர்கள் நிதியுதவியுடன் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லோட்டஸ் டவர் நாளையில் இருந்து ஒரு வாரத்தின் பின்னர் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க