உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் நுவரெலியா மாவட்ட கூட்டம்

அனைத்து தமிழர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் உதயமாகியுள்ள தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் அறிமுகமும், கலந்துரையாடலும் (13.09.2019) அன்று நுவரெலியா பொதுநூலகம் மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்தாடல்களும் இடம்பெற்றன.

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இடைவிலகளுக்கான காரணங்கள் எவை, சாதாரண தர உயர்தரம் கற்றப்பின்னர் தொழிற்கல்வியை நோக்கி பயணிப்பது எவ்வாறு, பெருந்தோட்டப்பகுதிகளுக்கான விஞ்ஞானப் பாடசாலைகளின் முக்கியத்துவம் என்பன உட்பட கல்விசார் விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டன.

அத்துடன், எழுத்துமூலம் யோசனைகளை முன்வைப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்களின் யோசனைகள் உள்வாங்கப்பட்டபின்னர் பேராசிரியர்களான சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி, தனராஜ் ஆகியோர் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை தமிழ் மேம்பாட்டு ஒன்றியத்திடம் கையளிக்கும்.

தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் முதலாவது அறிமுக நிகழ்வு வவுனியாவிலும் அங்குரார்ப்பணக்கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் நடைபெற்றது. இதன்போதும் வெவ்வேறான தலைப்புகளின்கீழ் கருத்தாடல்கள் இடம்பெற்று யோசனைகள் உள்வாங்கப்பட்டன.

இவற்றை மையமாகக்கொண்டு தீர்வு திட்ட யோசனை, தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் முதலாவது மாநாட்டின்போது முன்வைக்கப்படவுள்ளது.

மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல்கள் முடிவடைந்த பின்னர் ஜனவரி மாதமளவில் மாநாட்டை நடத்துவதற்கு தமிழர் மேம்பாட்டு ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க