உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முஸ்லிஸ் ம.ம.வி பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழா

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிஸ் மத்திய மகா வித்தியாலைய பாடசாலையின் 75வது ஆண்டு பவள விழா நிகழ்வுகள் அக்கிராமத்தின் பழய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 12ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வரும் நிலையில் நேற்று சனிக்கிழமை (14) பழய மாணவர்களால் மாபெறும் நடை பவனி முன்னெடுக்கப்பட்டது.
 சுமார் 1500 பேர்கள் வரை குறித்த பவனியில் கலந்து கொண்டனர்அமைச்சர் ரிசாட் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் குறித்த பவனியில் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அபிவிரித்தியை முன்னெடுக்கும் முகமாக சுமார் 1500 பழய மாணவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைப்பதற்கான கையெழுத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த நடை பவணியானது எருக்கலம் பிட்டி கிராமத்தினூடாக-தலைமன்னார்-மன்னார் பிரதான வீதிவழியாக மன்னார் நாகரப்பகுதியை வலம் வந்து மீண்டும் குறித்த பாடசாலையை சென்றடைந்தது.
தொடர்ந்து பழய மாணவர்கள் பாடசாலைக்கு வழங்கிய சுற்று மதில் நுளைவாயில் பெயர்ப்பலகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிபரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க