பொன்மொழிகள்

ஆணவம்! ராமகிருஷ்ணர்

  • ஆணவம் வருவது அறியாமை காரணமாக. அறியாமை காரணமாகவே ‘நான் கர்த்தா’ என்ற எண்ணம் வருகிறது.
  • இறைவனே கர்த்தா. அவர்தான் எல்லாவற்றையும் செய்பவர், நான் எதையும் செய்யவில்லை’ என்ற உணர்வு ஏற்படுமானால் அவன் ஜீவன்முக்தன்.
  • மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈசுவரனைக் காண முடியவில்லை என்று குறை கூறுகிறாய். அவரைக் காண வேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று.
  • ஆணவம் இருந்தால் இறையனுபூதி ஏற்படாது. ஆணவம் எத்தகையது தெரியுமா? அது குன்றின் உச்சி போன்றது, அங்கே மழைநீர் தங்குவதில்லை, கீழே ஓடி விடுகிறது. அதுபோல் ஆணவம் என்ற குன்றின் உச்சியில் இறையருள் என்ற மழைநீர் தங்காது.

கருத்து தெரிவிக்க