சினிமா

சிவகார்த்திகேயனின் “நம்ம வீட்டு பிள்ளை” டிரைலர்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘நம்ம விட்டுப் பிள்ளை’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரை பார்த்தால் மீண்டும் ஒரு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைப் பார்க்கப் போகிறோமோ என்ற உணர்வுதான் வருகிறது. சிவகார்த்திகேயன் கிராமத்துப் படங்களில் நடிப்பது அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனுடன் சேரும் போது மட்டும் தான் சூரியின் நகைச்சுவையும் நன்றாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அண்ணன், தங்கை பாசக் கதைதான் இந்தப் படம். அதற்கு உதாரணமாக இருக்கும் இரண்டு முக்கிய படங்கள் ‘பாசமலர், கிழக்கு சீமையிலே’. இப்படத்தில் கிழக்கு சீமையிலே படத்தை இயக்கிய பாரதிராஜாவையும் காணக் கூடியதாக உள்ளது. சிவகார்த்திகேயனின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ், காதலியாக அனு இம்மானுவேல் நடித்திருக்கிறார்கள். 2019ல் ஒரு அண்ணன் தங்கை பாசக் கதை எப்படி இருக்கும் என்று இந்தப் படம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி இமான் – சிவகார்த்திகேயன் கூட்டணி இதிலும் ஹிட்டடிக்கலாம்.

நேற்று வெளியாகியிருந்தது “நம்ம வீட்டு பிள்ளை” டிரைலர் இதோ!

கருத்து தெரிவிக்க