உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

டெங்கு அற்ற பாடசாலைகளுக்கான செயற்திட்டம் ஆரம்பம்

வவுனியாவில்  டெங்கு அற்ற பாடசாலை என்ற போட்டி நிகழ்ச்சிதிட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டெங்கு அற்ற பாடசாலை என்ற எண்ணக்கருவில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் பாடாசாலைகளிற்கிடையில் வருடம் தோறும் நடாத்தபடுகின்ற போட்டி நிகழ்வு இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  14 பாடசாலைகள் இவ் போட்டி நிகழ்விற்கு தெரிவு செய்யபட்டுள்ளதுடன்.
முதற்கட்டமாக சிறீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம்,  நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இன்றையதினம்  ஆரம்பிக்கப்பட்டது.
டெங்கு அற்ற பாடசாலைக்கான வேலைத்திட்டத்திற்குள் பாடசாலைக்கு உள்ளே, வெளியே எவ்வாறான வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார்கள்.
பெற்றோர் பாடசாலைக்கு என்னென்ன வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார்கள். போன்ற பல்வேறு விடயங்கள் இதற்குள் அடங்கும்.இவ் நடவடிக்கை மூன்று கட்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுற்றாடல் அதிகார சபையினர், வலயக்கல்வி பணிமனையினர் கலந்து கொண்டதுடன் மேற்பார்வை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க