1950 ஆம் ஆண்டு காலங்களில் இலங்கையிலுள்ள அமைச்சுக்களில் செயலாளர்களாக 60 வீதமானவர்கள் தமிழர்கள்தான் இருந்துள்ளார்கள்.
எப்போதும் கல்வியில் அரசியலைக் கலக்கக்கூடாது. கல்வி அனைவருக்கும் வேண்டியது எமது சமுதாயத்தின் முதுகெலும்பாகவுள்ளது.
அது தமிழ்; மக்களினது சொத்து, 1950 ஆம் ஆண்டு காலங்களில் இலங்கையிலுள்ள அமைச்சுக்களில் உள்ள செயலாளர்களாக 60 வீதமானவர்கள் தமிழர்கள்தான் இருந்துள்ளார்கள்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை தேசிய வேலைத்திட்டத்தின கீழ் பட்டிருப்பு வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா திங்கட்கிழமை (09) காலை நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
பதவிகளை வகிக்கின்றவர்களின் ஆளுமை மிகவும் முக்கியமானதாகும், அந்த ஆளுடையை வைத்துக் கொண்டு பல விடையங்களைச் சாதிக்கலாம்.
எந்த அமைப்பாளருக்கும் கொடுக்காத விடையமான கம்பரெலியத்திட்டத்தின் கிழ் இந்த மாவட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதியைக் நான் கொண்டு வந்துள்ளேன்.
மேலும் 100 மில்லியன் ரூபா கொண்டு வரவுள்ளேன். என்னுடைய கெட்டித்தனத்தால் பிரதம மந்திரியிடம் அளுத்தத்தைக் கொடுத்து அவர் மூலமாகத்தான் இந்த பணத்தைக் கொண்டு வந்தேன்.
அதுபோன்றுதான் கடந்த காலத்தில் நான் பிரதியமைச்சராக இருந்த காலத்தில் மட்டக்களப்புக்கு கல்லியற் கல்லூரியை நான் அப்போதிருந்த கல்வியமைச்சர், றிட்சட் பத்திரனவினது ஆதரவுடன் கொண்டுவந்தேன்.
மட்டக்களப்பு இசைநடனக் கல்லூரி, பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வழாகம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைத்தேன், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடத்தைக் கொண்டு வந்துள்ளேன்.
நான் கல்விக்கா பல சேவைகளை ஆற்றியுள்ளேன். இதனை கல்வியியலாளர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
எப்போதும் கல்வியில் அரசியலைக் கலக்கக்கூடாது. கல்வி அனைவருக்கும் வேண்டியது எமது சமுதாயத்தின் முதுகெலும்பாகவுள்ளது.
அது தமிழ்; மக்களினது சொத்து, 1950 ஆம் ஆண்டு காலங்களில் இலங்கையிலுள்ள அமைச்சுக்களில் உள்ள செயலாளர்களாக 60 வீதமானவர்கள் தமிழர்கள்தான் இருந்துள்ளார்கள்.
40 வீதமானவர்கள்தான் அக்காலத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் செயலாளர்காளக இருந்துள்ளார்கள். கல்விச் சமூகத்தை நாங்கள் மதிக்கவேண்டும்.
இன்று 500 பாடசாலைகள் இலங்கை முழுவதும் திறந்து வைக்கப்படுகின்றன. அதற்காக 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் இத்திட்டத்திடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 18 ஆயிரம் செயற்றிட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலே 9094 பாடசாலைகள் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 1097 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே எமது பிரதேசத்திற்கு கல்வியமைச்சர் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க