முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் தனது 95 ஆவது வயதில் காலமானார்.
பாகிஸ்தானின் சிந்தி பகுதியில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார்.
இதன்பின் மும்பை தொகுதியில் இருந்து பா.ஜ.க.வின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெத்மலானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மந்திரி சபையில் மத்திய சட்ட மந்திரி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரியாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
கடந்த 2017ம் ஆண்டு தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார்.
இன்னும் சில நாட்களில் தனது 96வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க