இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு இன்று காலை சந்திரன் லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.
இதனையடுத்து அதன் தொடர்பை பெறுவதற்கு விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
சந்திரனில் தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி தடைப்பட்டிருக்கலாம். ஆனால் இலட்சிய சந்திரயான் 2 பணி தோல்வியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்திரனில் இறங்குவதில் தோல்வி ஏற்பட்டாலும் இந்த திட்டத்திற்கு ஒரு வருடம் பணி ஆயுள் இருப்பதால் சந்திரயான் 2 சுற்றுப் பாதை நடவடிக்கையில் தொடர்ந்து இருக்கும்.
இந்தநிலையில் சந்திராயனின் 5 சதவிகித பணிகள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன
எனினும் சந்திரயான் 2 சந்திரனை 95 வீதம் வெற்றிகரமாக சுற்றுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இஸ்ரோ அதிகாரி தெரிவித்து உள்ளார்.
சந்திரயான் -2 சுற்றுப்பாதை நிலவின் பல படங்களை எடுத்து அடுத்த ஆண்டு இஸ்ரோவுக்கு அனுப்பலாம்.
கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 உந்துகனை மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
கருத்து தெரிவிக்க