மிளகு, கருவா, ஏலம், சாதிக்கா போன்ற ஏற்றுமதி விவசாயப் பொருட்கள் தொடர்பான உற்பத்தியாளர்களை தெளிவு படுத்தும் செயலமர்வு ஒன்று கண்டியில் இடம் பெற உள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் ஏற்றுமதி விவசாயப் பொருட்களை உற்பத்தியாளர்களைப் பதிவு செய்தலும் இடம்பெற உள்ளது.
வாசனைத் திரவியங்கள் மற்றும் மசாலப் பொருட்கள் தொடர்புடைய உற்பத்தி மற்றும் கைத் தொழில்
துறையுடன் தொடர்புடையவர்களுக்காக இச் செயலமர்வு ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டியிலுள்ள மேற்படி திணைக்கள கேட்போர் கூடத்தில் இதனை
நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளதாக அதன் கண்டி மாவட்ட பதில் பணிப்பாளர் ஆர்.கே.டப். ரன்கெத்கும்புற தெரிவித்தார்.
காலை 9.00 மணிக்க இது ஆரம்பிக்கப்பட உள்ளது.
இச் செயல் அமர்வில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விளக்கமளிப்பதுடன் தொடர்புடைய கைத் தொழிலை அபிவிருத்தி செய்வது தொடாபாகவும் விளக்கமளிக்கப்படும்.
சிறு ஏற்றுமதி விளைபொருட்களை தரமானதாக எப்படி உற்பத்தி செய்வது பொதியிடுவது,
களஞ்சியப்படுத்துவது, சந்தை வாய்ப்புக்களை எவ்வாறு அறிந்துகொள்ளுதல்ரூபவ் கொள்வனவாளர்களுடன் எப்படி தொடர்பை ஏற்படுத்துவது மேற்படி நடவடிக்கைகளுக்கு முதலீடகளை எவ்வாறு பெறுவது மற்றும் இவற்றுக்கான மானியங்களை பெறும் முறைகள் போன்ற பல அம்சங்கள் தெனிவு படுத்தப்பட உள்ளன.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் ஏற்றுமதி விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி விவசாயப் பொருட்களின் தர நிரணய அடிப்படையில் எவ்வாறு ஏ.பீ.சீ. போன்ற
தரங்களில் பாகுபடுத்துவது அதனை; தர நிரணயத்தைப் பெற்றுக் கொள்ள அதிகாரமளிக்கப்பட்டவர்கள் யார் என்பது போன்ற விடயங்களையும்இச்செயலமர்வு ஊடபகத் தெரிந்துகொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க