ஆட்பதிவுத் திணைக்களத்தின் தென்மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிய கேட்போர் கூடம் காலி கடவத்-சத்திர பிரதேச தரை மாடியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த பிரதேச செயலக கட்டிட தொகுதிக்காக 8 கோடியே 74 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதற்கான நிர்மாணப்பணிகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் அரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரதேசத்திலுள்ள மக்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் மூலமான சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுவான சேவைகளான ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான சேவை, நடமாடும் சேவை உள்ளிட்ட பல சேவைகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் அரமைச்சர் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன, உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் அரமைச்சர் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
[ அரச தகவல் திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க