சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயனின் தமிழ் சோலோ படங்கள் கன்னடத்தில் ரீமேக் செய்ய திட்டம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த படங்களில் கொலையுதிர்காலம் தவிர மற்ற படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி ரசிகர்களிடத்தில் ராஜா ராணி படம் பெரிய வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றிருந்தது. அந்த வகையில் அவருடைய சோலோ படங்கள் அனைத்தையும் கன்னடத்தில் அடுத்தடுத்து ரீமேக் செய்யவுள்ளார்கள்.

ராஜா ராணி, டோரா, கோலமாவு கோகிலா, ஐரா ஆகிய படங்கள் ரீமேக் ஆகவுள்ளதாகவும் அவற்றின் ரீமேக் உரிமையை ஒரே நிறுவனமே வாங்குகிறது எனவும் சில படங்கள் வாங்கப்பட்டுவிட்டதாகவும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு படங்களிலும் நயன்தாரா நடித்த கேரக்டரில் நடிக்கவிருப்பவர் குட்டி ராதிகா. இவர் தமிழில் இயற்கை படத்தில் அறிமுகமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க