ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே தமது பிரதான நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சுயாதீனமானதொரு கட்சியாகும். அவர்கள் எம்முடன் தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எமது இரண்டு தரப்பினரதும் ஒரே இலக்காக இருக்கிறது.
எவ்வாறாயினும், நாட்டின் அடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கமொன்றுதான் ஸ்தாபிக்கப்படும்.
நாம் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவோம்.
எனவே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க