உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மட்டக்களப்பு நகரிலில் புதிய தனியார் பேரூந்து நிலையம்

மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் சுமார் ஆறரை கோடிரூபா செலவில் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் பேரூந்து நிலையத்தின்புதிய கட்டிடதொகுதி எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதுவரைகாலமும் வசதிகளின்றி பல்வேறு அசௌகாரியங்களுக்கு மத்தியில் செயல்பட்டுவந்த இத் தனியார் பேரூந்து நிலையத்தின் தேவை உணரப்பட்டு ரணில் விக்ரமசிங்க விடுத்த விசேட பணிப்புரைக்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்கவின் அங்கீகாரத்தில் ஒதுக்கீடு செய்யப்படட நிதியில் புதிய கட்டிடதொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த தனியார் பேரூந்து நிலையத்தின்புதிய கட்டிடதொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் பற்றி திட்டமிடும் விசேட கூட்டம் திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் மாநகரமற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு உத்தியோகத்தர் மகேந்திர ஜெயசிங்க காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூப ரஞ்சனி முகுந்தன், உள்ளிட்ட பல அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க