இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்துக்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தினால் 58 பேர் உயிரிழந்தனர். எனினும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 64 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க