சினிமா

ஒரே படத்தில் மூன்று வேடங்களில் அசத்தவுள்ள சந்தானம்!

சந்தானம் நடித்து கடந்த ஜூலை 26 ம் திகதி  வெளியான படம் ஏ1. அதனை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒருத்தரா வந்தாலே காமெடி சரவெடி, இப்போ டிரிபிள் ஆக்சன் வேற; 9வது தயாரிப்பான இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் தலைப்பு வருகிற செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். படத்தின் தலைப்பு ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் காமெடியனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்து தெரிவிக்க