48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் ஒரு மாதத்திற்கு மாத்திரம் இந்த இலவச வீசா சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலவச வீசா சலுகையின் மூலம், ஒரு மாத சுற்றுலா காலத்தின் பின்னர் சுற்றுலா பயணிகள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும்.
அவர்கள் மேலும் ஒருமாத்தினை கடந்து நாட்டில் தங்கியிருக்க வேண்டுமெனின், பணம் செலுத்தி வீசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள நிர்வாகி பசன் ரட்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச வீசா நடைமுறை அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
[ அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க