அமரிக்காவின் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை செப்டம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்வதில் அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.
எனவே அதற்கு முன்னர் அமைச்சரவையில் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
எனினும் ஜனாதிபதி இந்த ஒப்புதலுக்கு காலதாமதத்தை ஏற்படுத்திவருகிறார்.
இந்த உடன்படிக்கை காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சத்தை அவர் வெளியிட்டு வருகிறார்.
இதன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டால் இலங்கையின் வீதி அமைப்பு அபிவிருத்திகளுக்காக 480 பில்லியன் டொலர்கள் கிடைக்கும்.
இந்தநிலையில் இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் கிடைக்காதுபோனல் இந்த நிதியுதவி தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டி வரும் என்று அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க