உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்தலும் ஒருங்கே நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வருகின்ற டிசம்பரில் நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஏப்ரலுக்கு பிற்போடப்படலாம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமக்கு பதவிக்காலம் முடிவடைவது தொடர்பாக ஜனாதிபதி மீண்டும் உயர்நீதிமன்றின் விளக்கத்தை கோரும்போதும் ஜனாதிபதி தேர்தல் திகதி பி;ற்போடப்படும் நிலை உருவாகும் என்று அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் உத்தியோகபூர்வமற்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தரப்புக்களை கோடிட்டு ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது..

கருத்து தெரிவிக்க