இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் முறைகேடாக அரசியல் நிர்வாகத்தையே கொண்டுள்ளது.இவ்விரு கட்சிகளும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும் என சுயாதீன வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு மற்றும் முன்வைக்கும் கொள்கைத்திட்டங்களை தெளிவுபடுத்துவதற்குமான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம் பெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மாகாண சபை முறைமை முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து அரச நிர்வாகமும் ஒரு நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வரும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சட்டத்தின் வாயிலாகவே அனைத்தும் இடம் பெறுவதால்நீதித்துறை கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
நீதிக்கட்டமைப்பு அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்பட்டால் மாத்திரமே நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
71 வருட கால பழைமை வாய்ந்த அரசி யல் கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் அரச செயன்முறைகளே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முறையற்ற அரசியல் நிர்வாக கட்டமைப் புக்களுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் முயற்சிக்கின்றார்கள். இவர்கள் மூவரும் அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க