உள்நாட்டு செய்திகள்புதியவை

சுகாதாரமற்ற மாசிச் சம்பல் உற்பத்தி செய்தவருக்கு அபராதம்

களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரனால் மனித சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதும், இரசாயனம் கலந்ததுமான மாசிச் சம்பல் உற்பத்தி மற்றும் வினியோகத்திற்கு எதிராக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்குக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் எதிராளி குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கிணங்க நீதிமன்றினால் குறித்த நபருக்கு 20000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்தார்.

பொதுமக்களின் நலன்கருதி களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவு விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

குறிப்பாக உணவுப்பண்டங்கள், சிற்றுண்டிகள், மற்றும் ஏனைய சுகாதார விடையங்களிலும் அக்கறை செலுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானதுடன் கொள்வனவு செய்யவேண்டும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தர்.

கருத்து தெரிவிக்க