ஏப்ரல் 21 அன்று சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயங்கரதியின் உடல் புதைக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீமதிமன்றில் இடம்பெற்றது; இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தற்கொலைதாரியின் உடலை பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் குறித்த மக்களது மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை என்று இதன்போது நீதிபதி தெரிவித்துள்ளார்,
அரசாங்க அதிபர் செய்த தவறே குறித்த உடல் பொது மயானத்தில் புதைக்கப்பட காரணம் என இதன்போது அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த பயங்கரவாதியின் உடல் இரகசியமாக புதைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த செயற்பாடுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க