- உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும். சோம்பல் ஒருவனை நரகத்திற்குத் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
- எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ள ஆசையை ஒருவன் அடக்கப் பழகி விட்டால், அப்போதே அவன் பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறுகிறான்.
- ஒழுக்க நெறியில் இருந்து விலகினால் ஒருவன் என்றுமே நீங்காத பெரும்பழியைச் சுமக்க வேண்டி வரும். ஆனால், ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவன் வாழ்வில் என்றும் மிக மேன்மைகளை அடைவான்.
கருத்து தெரிவிக்க