70-80 கி.மீ வேகத்தில் தற்காலிகமாக காற்று வீசும் மற்றும் நாளை கடல் கொந்தளிப்பு ஏற்பட கூடும் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.
வானிலை எச்சரிக்கை தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள மையம், இது தொடர்பாக கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டது.
இதேவேளை நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலை ஆகஸ்ட் 30 வரை ஓரளவிற்கு அதிகரித்து காணப்படும் என்று வானிலை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
50 கி.மீ வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசும். மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க